மெக்சிகோவில் இருந்து செயல்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறை போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான மெக்சிகோவின் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG)-ன் நிறுவனர் மற்றும் தலைவர் நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ், அல்லது “எல் மென்சோ” கொல்லப்பட்டார்.
2009–2010 வாக்கில் CJNG-ஐ நிறுவியா “எல் மென்சோ” லாஸ் ஜெட்டாஸ் மற்றும் நைட்ஸ் டெம்ப்லர் போன்ற போட்டி போதைப் பொருள் கடத்தல் அமைப்புகளுக்கு எதிரான வன்முறை மூலம் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

அதே நேரத்தில் ஜலிஸ்கோ, கோலிமா மற்றும் குவானாஜுவாடோ உள்ளிட்ட மாநிலங்களில் மெத், ஃபெண்டானில் மற்றும் கோகோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு மன்சானிலோ போன்ற முக்கிய துறைமுகங்களைக் கட்டுப்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் முன்னோடோடியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.
அமெரிக்காவிற்குள் போதைப் பொருள் கடத்தலை சர்வசாதாரணமாக நிகழ்த்தி வந்த இந்த கும்பலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திணறிய நிலையில் எல் மென்சோ குறித்து தகவல் தருபவர்களுக்கு $15 மில்லியன் வெகுமதி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜலிஸ்கோவின் டபல்பாவில் நடந்த ஒரு நடவடிக்கையின் போது மெக்ஸிகோ ராணுவம் அவரை சுட்டுக் கொன்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வரை ஹெலிகாப்டர் மூலம் மெக்ஸிகோ நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
எல் மென்சோ கொல்லப்பட்ட தகவல் பரவியதை அடுத்து மெக்ஸிகோ முழுவதும் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இதனால் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]