டெல்லி:  குடியரசு தலைவர், கவர்னர் உள்பட முக்கிய நபர்கள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில்,  முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல் பாடப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துளளது.

மத்திய உள்துறை அமைச்சகம் புதிய, அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ இன் ஆறு சரணங்களையும், அரசு விழாக்கள், அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படுவதற்கு முன்பு இசைக்க வேண்டும் அல்லது பாட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளது.

நாட்டுப்பற்று பாடலான வந்தே மாதரத்தை இனி அனைத்து அரசு விழாக்களிலும் முதலில் ஒலிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம்,  அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் 6 பாடல்கள் அடங்கிய பதிப்பு, பாடப்படவோ அல்லது ஒலிக்கச் செய்யவோ வேண்டும். இதன் கால அளவு 3 நிமிடம் 10 வினாடிகளாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இனி எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியும் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்க வேண்டும். இது சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் மரியாதையாக கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

 இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வீரர்களின் தாரக மந்திரமாக ஒலித்தது பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல். இது தேசிய பாடல் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. 1896 ஆம் ஆண்டு இந்தப் பாடல் முதல்முறையாக நாட்டின் பெருமை மற்றும் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக இந்திய தேசிய காங்கிரஸ் நிகழ்ச்சியில் பாடப்பட்டது. ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக நாட்டின் சக்தி வாய்ந்த எதிர்ப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பாடல் பாடப்பட்டது. 1950 ஆம் ஆண்டு வந்தே மாதரம் பாடல் நாட்டின் தேசிய பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதுபோல,  இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடல் நாட்டின் இறையாண்மையை குறிக்கிறது. இது ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட பாடல் ஆகும்.  இந்த பாடல்  அனைத்து மாநிலங்களிலும் பாடப்பட்டு வருகிறது. ஆனால், வந்தே மாதரம் பாடல் பாடப்படுவது இல்லை. கடந்த 2024ம்ஆண்டு, நவம்பர் 7 அன்று டெல்லியில் நடைபெற உள்ள ‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில்  வந்தே மாதரம் பாடல் குறித்து புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி,  மக்கள் அனைவரும்  வந்தேமாதரம் பாடலை ஆர்வத்துடன் பாடவேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆனால், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில அரசு நிகழ்ச்சியின்போது வந்தே மாதம் பாடல் பாடப்படுவது இல்லை.   சில மத மற்றும் அரசியல் அமைப்புகள்  ஆட்சேபனை தெரிவித்து வந்த நிலையில், அவை பாடப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த பாடல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இனி எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியும் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்க வேண்டும். இது சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் மரியாதையாக கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது. அரசு விழாக்கள், அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படுவதற்கு முன்பு இசைக்க வேண்டும் அல்லது பாட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளது.

அதன்படி,  அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் 6 பாடல்கள் அடங்கிய பதிப்பு, பாடப்படவோ அல்லது ஒலிக்கச் செய்யவோ வேண்டும். இதன் கால அளவு 3 நிமிடம் 10 வினாடிகளாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி இது தொடர்பாக 10 பக்க உத்தரவு உள்துறை அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் அதனைத் தொடர்ந்து “ஜன கண மன” பாடல் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

அரசு நிகழ்ச்சிகள் அல்லது பொது விழாக்களில் இனி வந்தே மாதரம் பாடல் முதலில் ஒலிக்க வேண்டும். இதுவரை இது தொடர்பாக எந்தவித வழிகாட்டுதல்களும் இல்லாமல் இருந்த நிலையில் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வந்தே மாதரம் பாடல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்தப் பாடல் ஒலிக்கும் போதோ அல்லது பாடப்படும் போதோ அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]