இந்தியாவின் எரிசக்தி (Energy) துறை, 500 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 45 லட்சம் கோடி) அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

‘இந்தியா எனர்ஜி வீக் 2026’ நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமர், எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா இந்த துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ள நாடாக மாறியுள்ளது என்றார்.

இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு (Oil Refining) மையமாக உருவாகும் என்றும் அவர் கூறினார்.

2030 ஆம் ஆண்டுக்குள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 9 லட்சம் கோடி) முதலீட்டை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும், தற்போது ஆண்டுக்கு 260 மில்லியன் டன் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திறன், 300 மில்லியன் டனாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை (Reforms) மேற்கொண்டு வருவதாகவும், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி விளக்கினார்.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து பேசிய அவர், “எல்லா ஒப்பந்தங்களின் தாய்” என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம்,
140 கோடி இந்தியர்களுக்கும், ஐரோப்பிய மக்களுக்கும் புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது என்றார்.

இது இரு பொருளாதாரங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றும், இந்த ஒப்பந்தம் உலகின் 25 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) உள்ளடக்கியதாகவும்,
உலக வர்த்தகத்தின் மூன்றில் ஒரு பங்கை இது கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

[youtube-feed feed=1]