சென்னை: 2026ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் மற்றும்பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசு தலைவர் உரையுடன் தொடங்க உள்ளது. இதையடுத்து, டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரும், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரும் நாளை (ஜனவரி 28ந்தேதி) தொடங்குகிறது. முதல்நாள் நாடாளு மன்றத்தின் இரு அவைககளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். இதை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாளை தொடங்கும் கூட்டம் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 29 அன்று பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரலாற்றில் முதன்முறையாக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது . இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
[youtube-feed feed=1]