சென்னை: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. இதை தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என பிரதமர் மோடி இன்று என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதை முன்னிட்டு பதிவிட்டு உள்ளார்.

சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் இன்று அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் இன்று மாலை தமிழ்நாடு வருகை தருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேஜகூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இநத நிலையில், அவர வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது.
மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன்.
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன”
இவ்வாறு கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]