சென்னை: “ஓய்வை மறந்திடு, முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு”  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருச்சியில் மார்ச் 8ம் தேதி ஸ்டாலின் , தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் திமுகழக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக,  திமுக தலைவரும், முதல்வருமான   எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது,

“ஓய்வை மறந்திடு; முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு!

அடுத்த 3 மாதங்களும் அமைச்சர் முதல் கிளைக் கழக நிர்வாகி வரை கண்துஞ்சாது களத்தில் சுழல வேண்டும்!

இளைஞரணி நிர்வாகிகள் மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், மண்டல அளவிலான ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டங்கள், திருச்சியில் மாபெரும் மாநில மாநாடு என இனி ஒவ்வொரு நாளும் நமது செயல்பாடுகளும் பரப்புரைகளும் தமிழ்நாட்டை நிறைக்கப் போகின்றன.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்:

பிப்-1 முதல் மார்ச்-8 வரை வாக்குச்சாவடி தோறும் 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களை வீடு வீடாகச் சென்று விளக்கி, கழகத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும்.

பிப்-1 முதல் பிப்-28 வரை, நட்சத்திரப் பேச்சாளர்களைக் கொண்டு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் நான்கு இடங்களில் தெருமுனை அல்லது அரங்கக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை.

BLA, BLC, BDA ஆகியோரைத் தேர்தல் பணிக்குத் தயார் செய்திடும் வகையில் பயிற்சி அளிக்கும் மாநாடுகளை பிப் -11 தாம்பரத்திலும், பிப்-14 திருப்பத்தூரிலும், பிப்-21 மதுரையிலும், பிப்-27 கோவையிலும் நடத்த முடிவு.

மார்ச் -8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில். ‘ஸ்டாலின் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]