சென்னை: முதலமைச்சரின் பாதுகாப்பு  பணிக்கு சென்ற பெண் காவலர்களை கழிவறையில் வீடியோ எடுத்ததாக  காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரமக்குடியில் அரங்கேறி உள்ளது.  இது பெண் காவல்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த  சம்பவத்திற்கு மாநில பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமது துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என காட்டமாக கூறி உள்ளார்.

முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களை கழிவறையில் உதவி காவல் ஆய்வாளர் வீடியோ எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லா நிலையில், தமிழ்நாடு உள்ளது என மாநில  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பரமக்குடி சென்றார்.  அங்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சரின் பாதுகாப்புக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பெண் காவலர்கள் உள்பட ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவல் உதவியாளர் ஒருவர், பெண்காவலர்கள் கழிவறைக்கு செல்வதை படம் எடுத்தாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக,  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,‘ “ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை புரிந்த முதலமைச்சருக்குப் பாதுகாப்பு அளிக்கச் சென்ற பெண் காவலர்களைக் கழிவறையில் செல்போன் மூலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி காணொளி எடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தான் பங்கேற்ற அரசு விழாவில், சீருடையணிந்த பெண்களுக்குக் கூட இம்மியளவும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீரழித்துள்ள கேவலபட்ட ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமது துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

ஆட்டு மந்தையில் ஓநாய் புகுந்தது போல, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், பெண்களின் பாதுகாப்பை சூறையாடும் திமுக அரசை வரும் தேர்தலில் விரட்டியடிப்பது ஒன்றே தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றுவதற்கான ஒரே வழி”.

இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]