சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்திற்கு பிறகு, சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 13 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் தங்களை பெயர்களை சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். இதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுமார் 84 லட்சம் வாக்காளர்கள் போலி வாக்காளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு தமிழ்நாட்டில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13,03,487 போ் படிவம் 6-ஐ அளித்துள்ளனா்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் பணிகள் (SIR) மேற்கொண்டது. இதற்கான பணிகள் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. பின்னர் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு, 2025ம் ஆண்டு டிசம்பர் 19ந்தேதி அன்று மாலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த பட்டியலில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதன்முலம் தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.
தலைநகர் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன், முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மட்டும், 1,03,812 பேர் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுக்களை மெய்ப்பிப்பதாகவே இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க தோ்தல் ஆணையம் அளித்த அவகாசம் டிசம்பர் 19ந்தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் ஜன.18 ந்தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்த படிவம் 7-ஐ 35,646 போ் அளித்துள்ளனா். இதுவரை பெயா் சோ்க்க 13,03,487 போ் படிவம் 6-ஐ அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TamilNadu 1.3 million people have applied to have their names added to the voter list!
[youtube-feed feed=1]