மதுரை: கோலாகலமாக நடைபெற்ற  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. முதல் பரிசை வென்ற வீரருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசு வழங்கினார். இந்த போட்டியிங்ல வெற்றி   முதல் 3 பரிசுகளை வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையிலுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி மிக விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான  நேற்று  (ஜன.15) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ந்டைபெற்றது. இந்த போட்டியை இன்று காலை போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயா, காவல் ஆணையர் லோகநாதன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்

இந்த போட்டியில் 1,100 காளைகளும், சுமார் 600 வீரர்களும் போட்டியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். காலை தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,  மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்தது.

முன்னதாகஇ,  மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டன. வாடிவாசலின் முன்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு முதல் காளையாக கோயில் காளை களமிறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒவ்வொரு வீரரும் அடக்கும் காளைகளின் எண்ணிக்கையை கணக்கிடும் ஸ்கோர் போர்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எல்இடி திரையில் வீரர்கள் பிடித்த காளைகளின் எண்ணிக்கை நேரடியாக காட்டப்பட்டு வந்தது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

போட்டியில் காயமடைவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 15 படுக்கைகள் கொண்ட முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. 100 பேர் கொண்ட மருத்துவ குழுவினரும், 12 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த போட்டியில் 22 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். ஒரே சுற்றில் 18 காளைகளை அடக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாலமுருகனுக்கு, முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து 17 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 2வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி தொடர்ந்து முன்னிலை வகித்த இவர், பின் 17 காளைகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தார். இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்து அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் 3வது இடத்தை பிடித்தார். மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக, விருமாண்டி சகோதரர்களின் காளை முத்து கருப்பன் தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.

தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் எளிதில் போட்டியை ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த போட்டியை காண மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

 

[youtube-feed feed=1]