சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. இந்த காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக,  தமிழ்நாட்டில்  இன்றும், நாளை (9, 10)யும் டெல்டா மாவட்டம் உள்பட கடற்கரை மாவட்டங்களில்,  12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும். இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் நேற்று இரவு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது; இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும் என முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது./

தற்போது சென்னைக்கு 800 கி.மீ., காரைக்காலுக்கு 630 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம் நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இலங்கையில் கரையை கடக்கிறது. இதன் காரணமாக, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]