சென்னை: ‘டெல்டா’ மண்டல மகளிர் அணி மாநாடு தேதி மாற்றம் செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்”” என்ற பெயரிலான திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு ஜனவரி 19ந்தேதி அன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மாநாடு ஜனவரித 26ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 29-ந் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வருகிற 19-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.ராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி- கழக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.ராணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]