சென்னை: நாட்டின் நம்பர்1 தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் நிகழ்ச்சியில், சாஸ்த்ரா, சாரங் 2026 திருவிழாவையும், குளோபல் மையத்தை[யம் மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், ஐஐடி மெட்ராசில் நடைபெறும் இருவார நிகழ்வுகளான சாஸ்த்ரா மற்றும் சாரங் 2026-ஐத் தொடங்கி வைத்ததுடன், உலகளாவிய தொலைநோக்கு, யோசனைகள் மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடும் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷனையும் ( குளோபல் மையம்) தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக ஐஐடிஎம் குளோபல் மையம் கருதப்படுகிறது.
ன்னை ஐஐடி கல்வி நிறுவனத்தை உலகளாவிய வலையமைப்பு மையமாக நிலைநிறுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஐஐடிஎம் குளாேபல் மையத்தை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இன்று துவக்கி வைத்தார். சென்னை ஐஐடியின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நிகழ்வான ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்ப கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக உருவெடுப்பதற்கான சென்னை ஐஐடியின் பயணத்தில் ஐஐடிஎம் குளோபல் மையம் ஓர் மைல்கல்லாக கருதப்படுகிறது. இதன் மூலம் கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவுக்கான உலகளாவிய வலையமைப்பு மையமாக இந்த உயர் கல்வி நிறுவனம் நிலைநிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, துபாய் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தலா மூன்று, பிரிட்டனில் ஒன்று என ஐஐடிஎம் குளோபல் மையங்களின் எண்ணிக்கை அடங்கும்.
இதே போன்று, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு துறைச் சார்ந்த ஆய்வகங்கள் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட வசதியாக ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்ப விருந்து, வருடாந்திர கலாச்சார விழாவான ‘சாரங்’ ஆகிய நிகழ்வுகள் இன்று தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகின்றன என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, “ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் என்பது சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐஐடி மெட்ராஸின் உலகளாவிய முயற்சியாகும். எங்களின் தொழில்நுட்பங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று பல்வேறு நாடுகளுடன் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்த மையம் அமைந்துள்ள நாடுகளின் தொழில்நுட்ப திட்டங்களை கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்களின்கீழ் இங்கே கொண்டுவர திட்டமிட்டுள்ளோம், இதன் மூலம் எங்கள் பேராசிரியர்கள் உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு பணியாற்றவும், அவற்றுக்கான தீர்வுகளை வழங்கவும் முடியும்.
இந்நாடுகளில் உள்ள வணிக வாய்ப்புகளுக்கு எங்கள் புத்தொழில் நிறுவனங்களை அறிமுகப்படுத்துவதையும், அவற்றின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.
“தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறை கூட்டாளிகள், அவர்களுக்கான உலகளாவிய சந்தைகள், மூலதனம் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை அணுக உதவும் பிளக்-அண்ட்-ப்ளே கட்டமைப்பாக ஐஐடிஎம் குளோபல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி-யின் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள், மேம்பட்ட உள்கட்டமைப்பு, வலுவான தொழில் துறை ஒத்துழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஐஐடிஎம் குளோபல் சமூக தாக்கத்தில் தெளிவான கவனம் செலுத்தி கண்டுபிடிப்புகளையும் தொழில்முனைவையும் விரைவுபடுத்த முயல்கிறது” என்றும் காமகோடி கூறினார்.
“சர்வதேச அளவில் கல்வி கற்போருக்கு ஆன்லைன் படிப்புகள்- பயிற்சி உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் திட்டங்களை வழங்குதல், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், சைபர் பாதுகாப்பு, பிளாக்செயின், விண்வெளித் தொழில்நுட்பம், எரிசக்தி, நீர் நிலைத்தன்மை, சுகாதார தொழில்நுட்பம், பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அதிநவீன ஆராய்ச்சியையும் ஆலோசனையையும் மேம்படுத்துதல், காப்புரிமை வணிகமயமாக்கல்- தொழில்நுட்ப பரிமாற்றத்தை செயல்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஐஐடிஎம் குளோபல் நோக்கமாக கொண்டுள்ளது” என்றும் ஐஐடி வேந்தர் காமகோடி தெரிவித்தார்.
[youtube-feed feed=1]