சென்னை: தமிழ்நாட்டில், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள்  முனைவர் படிப்பான பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே,மத்தியஅரசு சார்பில், பிரதம மந்திரியின் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான உதவித்தொகை (PMRF) (₹70k-₹80k + மானியங்கள்) மற்றும் IIT காந்திநகர் (மொத்தம் ₹1 லட்சம்) அல்லது விஸ்வேஸ்வராயா திட்டம் (மொத்தம் ₹1 லட்சம் மற்றும் திறமையான பகுதிகள்) போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் மாதத்திற்கு ₹1 லட்சம் (அல்லது அதற்கு மேல்) PhD உதவித்தொகைகள் உள்ளன.  வழக்கமான JRF/SRF கட்டணங்களிலிருந்து வேறுபடுகிறது (சுமார் ₹25k-₹40k). இந்த உயர் உதவித்தொகையானது, பெரும்பாலும் தொழில்துறை ஒத்துழைப்பு அல்லது நிறுவன ஆதரவுடன், உயர் முன்னுரிமைத் துறைகளில் ஆராய்ச்சியைத் தொடரும்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள்  முனைவர் படிப்பான பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு, குறிப்பாக பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் இந்த சமூகங்களைச் சேர்ந்த மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு, ஆண்டுக்கு ₹8 லட்சம் வருமான உச்சவரம்புடன், ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகையை வழங்குகிறது. இந்த உதவித்தொகை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் 1600 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து,  தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்,  முழுநேர முனைவர் பட்டப் படிப்பு (பிஎச்.டி) படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் 2ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கும், ஏற்கெனவே ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் அதை புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர பிஎச்.டி பயிலும் தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களாக இருக்க வேண்டும்.முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வயது வரம்பு 50, மாணவிகளுக்கு 55 ஆகநிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை adwphdscholarship.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்தை துறைத் தலைவர் மற்றும் பல்கலை. பதிவாளரின் பரிந்துரையுடன், ‘ஆணையர்,ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை – 5’ என்ற முகவரிக்கு ஜன.31-க்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]