சென்னை: தமிழகத்தில் 2025-ம் ஆண்டு அரசு பணிகளுக்கு 20,471 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்த 2025-ம் ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுபணிகள் விரைவுபடுத்தப்பட்டுபல்வேறு பணிகளுக்கு 20,471 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ல் கூடுதலாக9,770 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேரடி நியமனங்களில் சமூகநீதியை வலுப்படுத்தும் வகையில் 1,007 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (எஸ்சி-எஸ்டி) நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 761 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தெரிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு நடைமுறைகளில் நேரலை மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கடந்த ஆண்டில் பல்வேறு புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக திட்டமிட்டப்படி தேர்வு அறிவிப்பு வெளியாகி, விரைவாக முடிவுகளை வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டில் மொத்தம் 20471 தேர்வர்களை தேர்வு செய்துள்ளதாகவும் இன்னும் 11,809 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டை காட்டிலும் 9770 தேர்வர்கள் கூடுதால தேர்வு செய்யப்பட்டு, பணி வழங்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி 2025
2025-ம் ஆண்டில் மொத்தம் 7 போட்டித்தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு இருந்தது. ஆனால், மொத்தம் 10 போட்டித்தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியாகின. ஆண்டு அட்டவனையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடதாதபோதும், அறிவிப்பு வெளியாகும்போது எண்ணிக்கை வெளியிடப்பட்டன. அதன்படி, டிசம்பர் மாதம் வரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வாகியுள்ளனர். இது 2024-ம் ஆண்டை காட்டிலும் 9 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் ஆகும். இதுமட்டுமின்றி, 11,809 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைப்பு காலிப்பணியிடங்களில் 1007 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 761 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
யூடியூப் சேனல் மூலம் கலந்தாய்வு நேரலை
மிக முக்கியமாக, தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், கலந்தாய்வில் நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் விவரங்களை தேர்வர் கள் எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில், தேர்வாணையத்தின் யூடியூப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்பும் முறை முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
கணினி வழி தேர்வின் விடைத்தாள்
மத்தியஅரசு தேர்வுகளில் உள்ளதுபோன்று, கணினி வழியில் நடைபெறும் தேர்வுகளின் விடைத்தாளை உத்தேச விடைக்குறிப்பு வெளியிடும்போது இணையதளத்தில் வெளியிடும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் தேர்வர்கள் அவர்களின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து, விடைக்குறிப்பை சரிபார்த்துக்கொள்ளலாம்.
மற்றொரு முக்கிய அம்சமாக, அரசுத் துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை இணையவழியில் பெறும் வசதியை தேர்வாணையம் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள், அந்தந்த ஆண்டிலேயே நிரப்ப வழிவகை செய்யப்பட்டது.
யுபிஐ மூலம் கட்டணமும், RTI இணைய வசதியும்
இந்தாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்களில் ஒன்றாக, யுபிஐ சேவை மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. அதே நேரம், தேர்வர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இனையவழியில் மனுக்கள் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை அனைத்தையும் விட, தேர்வர்களுக்கு உதவியாக இருக்கும் ஆண்டு அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்பட்டது. அட்டவணையில் குறிப்பிட்டப்படி உரிய தேதியில் அறிவிப்புகள் வெளியாகின. வரலாற்றில் முதன்முறையாக 2024, 2025 மற்றும் 2026-ம் ஆண்டிகளில் தொடர்ச்சியாக குரூப் 1, குரூப் 2, குரூப் 4, அனைத்து ஒங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் இடம்பெற்றன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான தேர்வை எழுத வாய்ப்பு கிடைத்தது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், டிஎன்பிஎஸ்சி நடைமுறைகள் தேர்வர்களுக்கு எளிமையானதாகவும், தகவல்களை எளிதில் பெரும் வகையில் அமைந்தன.
பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டத்துடன், எந்தந்த பகுதியில் இருந்து எத்தனை கேள்விகள் இடம்பெறும் என தெளிவும் தேர்வர்களுக்கு கிடைத்தன. குறிப்படப்பட வேண்டிய மற்றோரு செயலாக, தவறாக தகவல்கள் தேர்வர்களுக்கு பரவாமல் இருக்க, தேர்வாணையம் செய்தி சரிபார்ப்பையும் மேற்கொண்டது. இருப்பினும், தமிழ் மொழித் தகுதித் தாள் கடினமாக உள்ளதாகவும், வினாத்தாளில் பிழைகள் ஏற்படுவதாகவும் அவ்வபோது புகார்கள் எழுத வண்ணமும் இருக்கிறது.
[youtube-feed feed=1]