புத்தாண்டு 2026

வெள்ளி விழா முடிந்த,
பொன்விழாவின் முதல் பிள்ளை
நீயடி புத்தாண்டு அழகி!!

அணிகலன் பூட்டி உன்னை
ஆசையாய் வரவேற்கிறோம்!!

அன்பை குழைத்து உனை
ஆராதித்து கைகூப்புகிறோம்!!

ஆசைகளை தோரணமாக்கி
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!!

நாற்புறமும் நலமே சூழ..
நித்திலமே உனை
அன்பு கூர்கிறோம்!!

உன் பெயரில் பூஜையிட்டு
ஆலயங்களை அலங்கரிக்கிறோம்!!

எங்கள் பாதைகளில் நீயே
விடிவெள்ளியாக வழிகாட்டிடு !!

உன் சுண்டு விரலை பிடித்து
உலகம் சுற்ற ஆசைப்படுகிறோம்!!!

நீயே உங்கள் சகோதரிகளுள் நல்லவள்
என பெயரெடுத்திடு!!

கால் நூற்றாண்டை
உன் குடும்பத்துடன் கடந்து விட்ட நன்றியும்
எங்களிடம் உண்டு.

எப்போதும் நினைவுகூர்ந்திடும் நண்பனாக….
நீ எங்களோடு
இருந்திடு அன்பே 2026

பா. தேவிமயில் குமார்

[youtube-feed feed=1]