சென்று வா 2025 ஆண்டே!!

பா. தேவிமயில் குமார்

வாண வேடிக்கையோடு ….
வாடிக்கையாக
2025 அனுப்பி வைப்பதே
புத்தாண்டு தொடக்கம் என்பேன்!!!

உறவு, விருது,
உதவியென உன் நட்பை பெற்றதால்
ஓடிக் கொண்டிருக்கிறேன் இன்றும் …

வெள்ளி விழா
நாயகியை வழி அனுப்பி விட்டு…

தங்கவிழா நாயகியை
வரவேற்க
ஆயத்தமாவோம்!!

ஈராறு திங்களும் எப்படி வேகமாய் சென்றதன வினவுகிறேன்???

அக்காளை விட
தங்கை எப்போதும் அழகுதான் என சொலவடை உண்டடி!!

உன் சகோதரி 2026 இடம் சொல்லி வைத்திடடி…
செல்லமாக எங்களை வழிநடத்திட… சரியா??

2025 அழகியே..
ஒரு பறக்கும் முத்தத்தோடு
உன்னை வழி அனுப்புகிறேன்

என் அனுபவ அணி கலனே…
சென்று வா…. வெள்ளி விழா ஆண்டே!!

பா. தேவிமயில் குமார்

[youtube-feed feed=1]