சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி,  விடுதிகளுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழ்நாடு அரச, மாநிலம்  முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்கள் என தெரிவிவித்துள்ளது.

2026 ஆங்கில புத்தாண்டு பிறக்கே இன்​னும் 2 நாட்​களே உள்​ளன.  இதனால், நட்சத்திர விடுதிகள்,  ரிசார்டுகளில், புத்தாண்டை கொண்டாட, இப்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தயாராகி வருகின்றனர்.  புத்தாண்டை பிரமாண்டமாக வரவேற்க சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர விடு​தி​கள், ரிசார்டுகள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அன்றைய தினம் ஆட்டம், பாட்டம் என அல்லோகல படுவதுடடன்,  31-ம் தேதி (புதன்​கிழமை) நள்​ளிரவு ஓட்​டல்​கள், கடற்​கரை, ரிசார்ட்​டு​களிலும் வண்ணயமான உல்லாச நிகழ்ச்சிகளும்  களை​கட்​டும்.

இந்த நிலையில், புத்தாண்டையொட்டி,  டிசம்​பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்​குத் தொடங்கி அடுத்த நாள் (ஜன.1) அதி​காலை வரை நடை​பெறும் புத்தாண்டு நிகழ்ச்​சிகளில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் தவிர்ப்​ப​தற்​காக காவல் துறை பல்​வேறு பாது​காப்பு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனையிட்டு பதிவு செய்வது, அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, நிகழ்ச்சி மற்றும் விருந்து நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

அனு​ம​திக்​கப்​பட்ட அரங்​கத்​தில் மட்​டுமே புத்தாண்டு நிகழ்ச்​சிகளை நடத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் நீச்​சல் குளத்​துக்கு செல்​லும் வழிகள் அனைத்​தும் அடைக்க வேண்​டும். வாக​னங்​களை அந்​தந்த ஹோட்​டல்​களின் வாகன நிறுத்​து​மிடத்​திலேயே நிறுத்த வேண்​டும். மது​பானங்​கள் அனு​ம​திக்​கப்​பட்ட மது​பானக் கூடத்​திலேயேபரி​மாற வேண்​டும்.

காவல் துறை​யால் அளிக்​கப்​படும் நேரக் கட்​டுப்​பாடு கட்​டாய​மாக பின்​பற்ற வேண்​டும். கேளிக்கை நிகழ்ச்​சிகளின்​போது பெண்​களை கேலி செய்​வதைத் தடுக்க போது​மானபாது​காப்பு ஊழியர்​களை; குறிப்​பாக பெண் பாது​காவலர்​கள் நியமிக்க வேண்​டும் என கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன.

சென்னை மட்​டும் அல்​லாமல் நெல்​லை, மதுரை, திருச்​சி, கோவை உள்பட அனைத்து மாவட்​டங்​களி​லும் கொண்​டாட்​டம் களை​கட்​டும் என்​ப​தால், அனைத்து பகு​தி​களி​லும் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

அதன்​படி தமிழகம் முழு​வதும் ஒரு லட்​சம் போலீ​ஸார் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்ட உள்​ளனர். வாகன பந்​த​யத்​தில் ஈடு​படு​வோர், மது​போதை​யில் வாக​னம் ஓட்​டு​வோரை பிடிக்​கும் வகை​யில் அனைத்து மாவட்​டங்​களி​லும் சாலைத் தடுப்​பு​கள் அமைக்​கப்பட உள்​ளன.

அது​மட்​டும் அல்​லாமல் முக்​கிய பகு​தி​களில் ஆம்​புலன்​ஸ்​கள் நிறுத்தி வைக்​கப்பட உள்​ளன. அரசு மருத்​து​வ​மனை​களில் கூடு​தலாக மருத்​து​வர்​கள் மற்​றும் மருத்​துவ உதவி​யாளர்​களும் உஷார் நிலை​யில்​ இருக்​க அறி​வுறுத்​த​ப்​பட உள்​ளனர்​.

[youtube-feed feed=1]