சென்னை: ஆடுதுறை பள்ளிக் கழிவறை விவகாரம் சர்ச்சையாலன நிலையில், இரண்டு அதிகாரிகள் அதிரடியாக பணிநிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில், இரு கோப்பைகள் அமைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையான நிலையில், இரு கழிவறைக்கும் இடையே சுவர் அமைக்கப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது அதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வளாகத்தை, ஆடுதுறை பேரூராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். அப்போது அவரும், அவருடன் இருந்தவர்களும் கழிவறையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரே அறையில் 20க்கும் மேற்பட்ட கழிவறை கோப்பைகள் எந்தவித மறைவுமின்றி அமைக்கப்பட்டிருந்தது. அதாவது ஒரு கழிவறை கோப்பைக்கும் அடுத்த கழிவை கோப்பைக்கும் இடையே எந்தவொரு மறைவும் ஏற்படுத்தவில்லை. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்த கழிவறை கட்டுவரை யாரும் பார்க்கவில்லையா, ஒப்பந்ததாரர் யார், அவருக்கு கழிவறை எப்படி அமைப்பது என்பது தெரியாது, இதை அரசு அதிகாரிகள் பார்வையிட வில்லையா, பள்ளி ஆசிரியர்களும் பார்வையிடவில்லையே, இதுதான் திராவிட மாடல் என சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்பட்டது. ரூ.34 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி கழிவறையில் தனியுரிமை வசதி இல்லாததால் சர்ச்சை ஏற்பட்டது. இது தமிழ்நாடு அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, அரசு பொறியாளர்களான ஆடுதுறை பள்ளி கழிவறை விவகாரத்தில் பொறியாளர் ரமேஷ், கமலக்கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஒரு கழிவறை கோப்பைக்கும் அடுத்த கழிவை கோப்பைக்கும் இடையே தடுப்புகள் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மறைவுகளை குறைந்த பட்சம் 5 அடி உயரமாவது கட்ட வேண்டும் என்றும், ஒவ்வொரு கழிவறைக்கும் கதவு போடப்பட வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
https://patrikai.com/controversy-echo-kanchipuram-sipcot-office-double-toilet-converted-into-separated/