சென்னை: தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல மதுரை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீப நாட்களாக தினசரி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்றும், மதுரை விமான நிலையம், நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் விஜயின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மதுரை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.