சென்னை: படித்தவர்கள் வாழும் பகுதியான சென்னையில், 14 வயது சிறுமியை 26 வயது இளைஞர் கட்டாய திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் பெசன்ட் நகர் சர்சசில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
14வயது சிறுமிக்கு சர்ச்சில் எப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது, அதை செய்து வைத்த பாதிரியார் யார், அவர் எவ்வாறு திருமணம் செய்து வைத்தார் என கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் த 14 வயது சிறுமியை , அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது உடைய விக்னேஷ் குமார் என்பவர் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவர் தனது பெற்றோர் மூலம் அந்த சிறுமியை பெண் கேட்டு நச்சரித்து வந்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோரும், அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இருவீட்டு பெரியோர்கள் சம்மத்துடன், அந்த சிறுமிக்கு செப்டம்பர் 24 – ம் தேதி பெசன்ட் நகர் சர்ச்சில் திருமணம் நடந்துள்ளது. அன்றே சிறுமியை விக்னேஷ்குமார் தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் சிறுமியின் பள்ளி தோழிகள் சிறுமியின் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, சிறுமிக்கு கட்டாய கல்யாணம் நடைபெற்றது தெரிய வந்தது. இதையதுத்த, , இதுகுறித்து, ‘181’ என்ற குழந்தைகள் நல எண்ணில் சிறுமியின் தோழிகள் புகார் அளித்தனர். சிறுமியின் விருப்பமின்றி அவருக்கு பெற்றோர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறினர்
புகாரைத் தொடர்ந்து செப்டம்பர் 25 -ம் தேதி , அங்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் , சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். பின்னர், சிறுமியின் எதிர்காலம் கருதி, செப்டம்பர் 29 – ம் தேதி பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இநத் குழந்தை திருமணம் குறித்து நகர நல அலுவலர் , புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, விக்னேஷ்குமார் மற்றும் இரு தரப்பு பெற்றோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது வெளியாகி, பேசும்பொருளாக மாறி உள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 14வயது சிறுமிக்கு சர்ச்சில் எவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டது என்பது பேசும்பொருளாக மாறி உள்ளது. இந்த விஷயத்தில், பெற்றோர்களுக்கு உடந்தையாக சர்ச் பாதிரியாரும் செயல்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஒருவேளை பாதிரியாருக்கு தெரியாமல் திருமணம் நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.