சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் “அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக்கூடாது” என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில்  முதல்வர் பெயர் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியிருந்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இந்த திட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்  இன்று இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

வழக்கின்  இன்றைய விசாரணையைத் தொடர்ந்து,   அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாத என்று கூறிய உயர்நீதிமன்றம்,   ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என கூறியதுடன்,   தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது, அரசு திட்ட பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது  என்று உத்தரவிட்டு உள்ளது

முதல்வர் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி அதிமுக அளித்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும் கூறி உள்ளது.

முன்னதாக தமிழ்நாடு அரசு தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டத்துக்கு எதிராக,  அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.வி. சண்முகம் மற்றும் சென்னை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் இணையன் ஆகியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகளை தொடர்ந்திருந்தார்கள்.  வழக்கின் முதல்கட்ட விசாரணையில்,  நாளை (ஆகஸ்ட்2ந்தேதி) தமிழ்நாடு அரசால் தொடங்கவுள்ள நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு திட்டத்தின் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு அரச கூறிய விளக்கத்தை ஏற்று, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

 “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம் பெற்றுள்ளதாகவும், அதேபோல முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். இது வந்து உச்சநீதி மன்ற தேர்வுக்கு முரணானது என்றும், அரசின் திட்டத்தில் ஒரு தனி மனித சாதனையை போல விளம்பரப்படுத்துவது தவறானது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்கள். எனவே ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்க இருக்கக்கூடிய அந்த மருத்துவ திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா மற்றும் சுந்தர் மோகன் ஆகிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டி.வி.சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் வாதாடுகையில், “முதல்வரின் முகவரி துறை சார்பில்,  “உங்கள ஸ்டாலின்” என்ற பெயரில் 10,000 முகாமல் நடத்தப்படுவதாகும். இது உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணை விதிகளுக்கு எதிரானது. மேலும் இந்த திட்டம் “முதலமைச்சர் திட்டம்” என்று போயிருந்தால் பரவாயில்லை. ஆனால் அதில் “ஸ்டாலின்” பெயர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அரசினுடைய விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர்களினுடைய சின்னங்களும் இடம்பெறக்கூடாது. ஆனால் சின்னங்கள் இடம் மற்றும் தலைவர்கள் படம் இடம் பெற்ற விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. அதேபோல ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கப்பட இருக்கக்கூடிய அந்த மருத்துவ திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்நாடு  அரசு தரப்பில் ஆஜரான அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதாடுகையில், “அரசு தரப்பு விளம்பரங்களில் முதலமைச்சர் படம் மட்டுமல்ல, துறை சார்ந்த அமைச்சர்களின் படங்களையும் பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

மனுதாரர்கள் தாக்கல் செய்திருக்கக்கூடிய தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சியின் சின்னம் கொண்ட விளம்பரம் அரசு விளம்பரம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.  அரசு விளம்பரத்தில் வெளியாகும் செய்திகளில் மக்கள் தொடர்பு துறையின் சீரியல் எண் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அரசு விளம்பரங்களில் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் பெயர் இடம் பெறலாம் என்று நீதிபதிகள் முன்பு தெளிவுபடுத்தினார்.

அதேபோல திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் பேசும்போது, “பொய் வழக்கை தொடர்ந்துள்ளார்கள் என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஏற்கனவே கடந்த ஆட்சியில் “அம்மா கேண்டின், அம்மா சிமென்ட்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மத்தியஅரசு பிரதமர் மோடியின் பெயரில் “நமோ திட்டம்” தொடங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதேபோல அண்டை மாநிலமான ஆந்திராவில் “ஜெகன்மோகன் திட்டம்” என்ற பெயரிலும் தொடங்கப்பட்டதையும் அவர் வந்து குறிப்பிட்டார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கு குறித்து தமிழக அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் திமுக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையைத் தொடரந்து,