பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கையெழுத்திட்ட கையோடு பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா விரைவில் எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நீண்ட காலமாக தனது கடற்கரையில் அதிக எண்ணெய் இருப்பு இருப்பதாகக் கூறி வருகிறது, ஆனால் அந்த இருப்புக்களை எடுக்க இதுவரை முயற்சி மேற்கொள்ளப்படவில்லை, மாறாக, அதன் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய கிழக்கிலிருந்து தற்போது எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட டிரம்ப், “பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து பரந்த எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்தும்” என்று கூறினார். இந்தக் கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை நடந்து வருகிறது. யாருக்குத் தெரியும்… எதிர்காலத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.