குடியாத்தம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜகவுக்கு கட்சிகளை உடைப்பதே வேலை எனக் கூறி உள்ளார்

நேற்று குடியத்தம் நகரில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,
“தி.மு.க. கூட்டணி மண் கோட்டை அல்ல, எஃகு கோட்டை. சுக்கு நூறாக உடையாது. உறுதியான கூட்டணி. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். பட்டியலினத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையிரை ஒருங்கிணைத்து ஒற்றுமையை கொண்டுவர வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். அதைத்தான் பா.ம.க. தலைவர் ராமதாசை சந்தித்தபோது தெரிவித்தேன்.
தமிழகத்தில் மன்னராட்சி நடப்பதாக பழனிசாமி பேசியுள்ளார். மன்னராட்சி ஒழிந்து பல காலம் ஆகிறது. அமித்ஷாவை பேரரசராகவும், தன்னை மன்னராகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
பா.ஜ.க.வுடன் சேர்ந்ததால் அ.தி.மு.க.வை மக்கள் புறக்கணிக்கிறார்கள். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உண்மைக்கு புறம்பான கூட்டணி. மக்கள் ஒருபோதும் இந்த கூட்டணியை அங்கீகரிக்க மாட்டார்கள்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை நான்கு துண்டுகளாகவும், தற்போது பா.ம.க.வை இரண்டு துண்டுகளாவும் பா.ஜ.க.வினர் ஆக்கிவிட்டனர். கட்சிகளை இரண்டாக உடைத்து மகிழ்வதுதான் பா.ஜ.க.வின் வேலை”
என்று கூறியுள்ளார்/