பெங்களூரு

ர்நாடக மாநில இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.

சமித் ராஜ் தரகுட்டே கர்நாடக மாநில இந்து ஜாகரணா வேதிகே எனும் இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகியாக இருந்து வருகிறார். அண்மையில் இவர் தனியார் பேருந்து மீது கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டதன்பேரில் சமித்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அப்போது போலிசார் அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.  இந்நிலையில் சமித் ராஜும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் சமித் ராஜின் செல்போனில் இருந்த தகவல்கள் குறித்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது.

அவற்றில் கடலோர மாவட்ட பகுதிகளில் அரசியல் தலைவராக வலம் வரும் ஒரு முக்கிய நபரின் ஆபாச வீடியோவும் இருந்தது தெரியவந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த போலீசார் சமித் ராஜுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.  இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.