துரை

துரை உயர்நீதிமன்ரம் தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க இடைக்காலத்தடை விதித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டுமுதல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள எலியார்பத்தி என்னும் இடத்தில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் எந்த பராமரிப்புப் பணியும் செய்யப்படவில்லை என்பதால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி, அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தியிலும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என உயர்நீதிமன்ர மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம்  மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளதுடன், எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது