சண்டிகர்
கொரோனாவால் பஞ்சாம் மாநிலத்தில் ஒரு 40 வயது நபர் மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000 கடந்து உள்ளது என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனவேபொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஆயினும் பஞ்சாபின் லூதியானா நகரில் வேலை செய்து வந்து உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரை சேர்ந்த 40 வயது நபருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டது. அதனுடன் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது.
அவரை சண்டிகாரில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்த்துள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் வைக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்துள்ளார். மருத்துவ நிர்வாகம் அவர், சமீபத்திய பரவலில் உள்ள தொற்றால் பாதிக்கப்பட்டாரா? என்ற விவரம் எதனையும் மருத்துவ நிர்வாகம் வெளியிடவில்லை.