இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு அவசரத்துக்கு கூட உதவாத நாடாக மாறியுள்ளது இண்டிகோ விவகாரத்தில் தெரியவந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பில் பாஜக அரசு அதீத கவனம் செலுத்திவருகிறது.

அந்தவகையில், பூரியில் உள்ள ஜெகன்னாதர் கோயிலுக்கு ஏற்படக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 12 ஆம் நூற்றாண்டு இந்து ஆலயத்தின் பாதுகாப்பிற்காக ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை நிறுவுவது குறித்து ஒடிசா அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக சட்டத்துறை, பூரி ஆலயத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுவுவது குறித்து ஒடிசா காவல்துறையுடன் கலந்துரையாடியுள்ளதாக சட்ட அமைச்சர் பிரிதிவிராஜ் ஹரிசந்தன் இன்று தெரிவித்தார்.

“கோயிலில் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை நிறுவுவதன் மூலம், இந்த அமைப்பு அங்கீகரிக்கப்படாத அல்லது தீங்கிழைக்கும் ட்ரோன்களைக் கண்டறிந்து, கண்காணித்து, செயலிழக்கச் செய்யும்” என்று அவர் கூறினார்.

தேவைப்பட்டால், ஸ்ரீ ஜெகன்னாதர் கோயில் நிர்வாகத்தால் (SJTA) நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அண்டை நாட்டிலிருந்து இலக்கு வைக்கப்படலாம் என்ற காரணத்தால், ஒடிசா அரசு சமீபத்தில் ஜகன்னாதர் கோயிலில் பாதுகாப்பை அதிகரித்தது.