திருபுவனம்

மாணவிக்கு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகியை நிர்வாணமாக்கி அடி உதை கொடுத்து போக்சோவில் கைது செய்யபட்டுள்ளார்.

திருப்புவனம், வடகரையைச் சேர்ந்த ராஜ்குமார் திருபுவனம் கிழக்கு ஒன்றிய பாஜ செயலாளராக உள்ளார்.  மேலும் பாஜ சார்ந்த யூடியூப் சேனல் ஒன்றில், பகுதி நேர நிருபராகவும் பணிபுரிந்து வரும் இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர் டிராவல்ஸ் நடத்தி வரும் ராஜ்குமார், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை வேனில் ஏற்றிச் சென்று டிரிப் அடித்து வந்துள்ளார்.

அப்போது இவரது வேனில் பள்ளிக்கு சென்று வந்த 10ம் வகுப்பு மாணவிக்கு, ராஜ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி தனது பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.  மாணவியின் உறவினர்கள் சிலர், ராஜ்குமாரை மதுரையில் உள்ள தங்களது வீட்டிற்கு நேற்று முன்தினம் வரவழைத்து அங்கு அவரை நிர்வாணமாக்கி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

ராஜ்குமாரின் செல்போனை பறித்து அவரை போட்டோ எடுத்து, ‘‘நான் ஒரு பொம்பள பொறுக்கி. என்னிடமிருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்’’ என டைப் செய்து ராஜ்குமாரின் செல்போனில் உள்ள அனைத்து மொபைல் நம்பர்களுக்கும் அனுப்பிவிட்டு சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். வாட்ஸ் அப்பில் இந்த தகவல் வேகமாக பரவி அதை பார்த்தவர்களும் பலருக்கு பார்வர்ட் செய்துள்ளனர்.

இந்த தகவலறிந்த போலீசார், திருப்புவனம் வடகரை கிராமத்தில் உள்ள ராஜ்குமார் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றபோது வீடு பூட்டி கிடந்து ராஜ்குமாரின் மனைவி, மகன்கள் யாரும் இல்லை,  அவர்ல: செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப்பில் இருந்தன. இந்நிலையில் நேற்று மாலை ராஜ்குமார், சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

மானாமதுரை டிஎஸ்பி தனிப்படை போலீசார், அங்கு விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து விசாரணைக்காக மானாமதுரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பள்ளி மாணவி ஒருவருக்கு பாஜக நிர்வாகி ராஜ்குமார் பாலியல் தொல்லை தந்து அந்த மாணவி பெற்றோரிடம் கூற, அவர்களது உறவினர்கள் சேர்ந்து ராஜ்குமாரை சரமாரியாக அடித்துள்ளனர். ஆயினும், போலீசாரிடம் புகாரளிக்காமல், அவர்களுக்குள் பேசி பிரச்னையை முடித்து கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்

BJP admin, Rajkumar, sex torture, POCSO,  arrest,