டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாத முகாம்கள்மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவா அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவரது குடும்பத்தினர் 10 பேர் உள்பட 14 பேர் சம்பவ இடத்தல் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் இந்த தாக்குதலுக்கு 24 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் இந்திய ராணுவ தாக்குதலை நடத்தியரு. “ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்த தாக்குதல் (மே 6ந்தேதி நள்ளிரவு 7ந்தேதி அதிகாலை) நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலின்போது, ஏவுகணைக்களைக்கொண்டு, 9 பயங்கரவாத மூகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டன” என்று கர்னல் சோபியா குர்ஷி தெரிவித்தனர்.

அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் இந்தியா 24 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. ஆபரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த எதிர்த் தாக்குதலில், முசாபராபாத், கோட்லி, பஹாவல்பூர், ராவலகோட், சக்ஸ்வரி, பீம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகிய ஒன்பது இலக்கு இடங்களில் 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.

இந்த இடங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளின் மையங்களாக அடையாளம் காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய முகாம்களை குறிவைத்து துல்லியமான ஏவுகணைகள் தாக்கப்பட்டன. எதிர்த் தாக்குதல் இந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாட்டுத் திறனைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.