டெல்லி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதாவது, விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்துகிறது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு விபத்துக்கு அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சையைப் பெற உரிமை உண்டு.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் இப்போது நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். இந்த திட்டம் நாடு தழுவிய அளவில் செயல்படும் என்றும், இந்தப் புதிய திட்டம், மருத்துவமனை கட்டணங்களின் சுமை இல்லாமல் விரைவான மருத்துவ உதவியை வழங்குவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
அவசர சிகிச்சையை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய படியாக, இந்திய அரசு அனைத்து சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரொக்கமில்லா சிகிச்சைக்கான நாடு தழுவிய திட்டத்தை முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் எங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.5 லட்சம் வரை இலவச சிகிச்சையைப் பெறுவார்கள். அதன்படி, நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதிப்பின் வகையைப் பொருட்படுத்தாமல் அனைத்து விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என குறிப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், விபத்தைத் தொடர்ந்து வரும் முக்கியமான “சிகிச்சை காலத்தில் ” உடனடி சிகிச்சையை வழங்குவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டது.
மேலும், இந்த திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 சதவீதம் அளவிற்கு குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.