டெல்லி:  பஹல்காம் பயங்கரவாத தாங்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்  பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,   மே 7-ம் தேதி நாடு முழுவதும்  சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

நாடு தழுவிய பயிற்சிகளின் செயல்திறனை உறுதி செய்வதற்காக உள்ளூர் நிர்வாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவுகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பின் அவசியத்தை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 22-ம் தேதி  அன்று மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், சுற்றுலா தலமான ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில்  நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

எதிரி நாடு வான்வழி அல்லது தரைவழி தாக்குதல் நடத்தினால், பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, மே 7-ம் தேதி நாடு முழுவதும் மாதிரி ஒத்திகைகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஒத்திகைகள் மூலம் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்களை இயக்குவது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மின் தடை மற்றும் ஒளி மறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் சோதிக்கப்படும்.

மேலும், வெளியேற்றத் திட்டங்களுக்கான ஒத்திகைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள், ராணுவத்துடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகள் போன்ற முக்கிய அமைவிடங்களை முன்கூட்டியே மறைப்பதற்கான பயிற்சிகளும் இந்த ஒத்திகைகளில் அடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உத்தரவுகள் தேசிய தலைநகரில் உயர்மட்டக் கூட்டங்கள் தொடர்ந்த நிலையிலும் நேற்று (மே 5ந்தேதி)

முன்னதாக,  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி சான்-ஐ சந்தித்தார். சிங் மற்றும் ஜெனரல் சான் இடையிலான இருதரப்பு சந்திப்பின்போது, இரு தரப்பினரும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டித்ததுடன், எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளின் அவசியத்தையும் வலியுறுத்தினர். பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டம் குறித்து ஜெனரல் சானுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முதலீடு செய்வதை எதிர்த்தார். அவ்வாறு செய்யப்படும் நிதி பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு திருப்பி விடப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. சிங் திங்கள்கிழமை பிரதமர் மோடியையும் சந்தித்து ஆயுதப் படைகள் தொடர்பான முக்கியமான கொள்கைகள் மற்றும் கொள்முதல் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ராணுவம் பல்வேறு பதிலடி விருப்பங்களை பரிசீலித்து வருகிறது.

இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு பட்ஜெட், முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் ராணுவ கொள்முதல் ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.