சென்னை; தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து  எரிவாயு நிறுவனங்கள், ஒவ்வொரு மாதம் முதல் நாளன்று சிலிண்டர் விலையை ஏற்றி இறங்கி வருகின்றனர். கடந்த மாதம் வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.15.50 குறைக்கப்பட்டு உள்ளது,. ஏற்கனவே  கடந்த ஏப்ரல்  1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில்,  இன்று (மே 1ந்தேதி)  19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.