கோவை
தெற்கு ரயில்வே கோடை காலத்தை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் சிறப்பு ரயில் இயக்கபடுவதாக அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”கோவை – ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06063) வருகிற மே மாதம் 02, 09, 16 மற்றும் 23, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த யில் கோவையில் இருந்து (வெள்ளிக்கிழமை) காலை 11.50 மணியில் புறப்படும்.
மறுமார்க்கத்தில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்- கோவை செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06064) வருகிற மே மாதத்தில் 05, 12, 19 மற்றும் 26, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் தன்பாத்தில் (திங்கட்கிழமை) இருந்து அதிகாலை 3.45 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பெட்டி அமைப்பு: 12- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 6- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- பிரேக் வேன்களுடன் கூடிய லக்கேஜ் உள்ளன.”
என அரிவிக்கப்பட்டுள்ளது.