சென்னை; கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதுபோல, ரயில் எண். 06521/06522 SMVT #பெங்களூரு – #மதுரை – பெங்களூரு சிறப்பு ரயிலை தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடைகால சிறப்பு ரயில் நாளை (ஏப்ரல் 29ந்தேதி) முதல்   நடைமுறைக்கு வருவதாகவும்,   அதன்படி, திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரயில், இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.

வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அதுபோல தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெங்களூருவில் இல் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க  கோடைக்கால சிறப்பு ரயில் தென்மேற்கு ரயில்வே சிறப்பு சேவைகளை அறிமுகப்படுத்துகிறது என்றும், அதன்படி,

ரயில் எண். 06521/06522 SMVT #பெங்களூரு – #மதுரை – SMVT பெங்களூரு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் பு

இந்த ரயில் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7மணிக்கு புறப்பட்டு காலை 6.15மணிக்கு மதுரை வந்தடைகிறது.

மறுமார்க்கமாக  மதுரையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.50 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இந்த ரயில் வாரம் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலுக்கு  இப்போதே முன்பதிவு செய்து இந்த #கோடையில் வசதியாக பயணிக்கவும் என குறிப்பிட்டுள்ளது.