மும்பை
மும்பை நகரின் பைகுல்லா ப்குதியில் உள்ள 57 மாடி கட்டிடத்தில் தீடிர் என தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. ஏராளமனோர் இந்த குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருகின்றனர்.
இன்று இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 42-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு தீயினால் அங்கு புகை சூழ்ந்தது. எனவே அங்கு வசித்து வந்தவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்,
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்வந்தனர். நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel