நாகை: நாகப்பட்டினம் முதல்  இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கடந்த 22ந்தேதி தொடங்கிய நிலையில்,   இன்று முதல்  3 நாட்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து கடந்த 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தொடங்கியது. ஆனால், இந்த கப்பல் போக்குவரத்துக்கு  மக்களிடைய வரவேற்பு இல்லாததால், அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து,  2023ம்ஆண்டு  அக். 10-ம் தேதி முதல் மீண்டும்  பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.   இதை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி   கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டது. ஆனால், போதிய பயணிகள் இல்லாததால் கப்பல் சேவை திட்டம்  ஒத்தி வைக்கப்படுவதாக  2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர்  4வதுமுறையாக 2025ம் ஆண்டு பிப்ரவரில், மீண்டும்,  நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு  பயணிகள் கப்பல் சேவை  தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி  பிப்ரவரி 12ம் தேதி மீண்டும் சேவை தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வானிலை பிரச்சினை காரணமாக, ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஒருவழியாக,   2025ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி முதல்  கப்பல் சேவை தொடங்கியது. இந்த சேவை தொடங்கி 4 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. போதைய பயணிகள் இல்லாத நிலையில்,   நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து இன்று முதல் பிப்., 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால்,  மோசமான வானிலை காரணமாக 3 நாட்களுக்கு நாகை -இலங்கை கப்பல் சேவை ரத்து என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 1 முதல் நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை வழக்கம்போல் தொடங்குமென அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கப்பல் சேவை தொடங்கிய 4 நாட்களிலேயே மீண்டும் ரத்தானதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.