சென்னை: அமைச்சர்கள் உடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்  பெறப்படுவதாக  அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர்  அறிவித்து உள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் நிலையில்,  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதியிருந்தனர். அதைத்தொடர்ந்து, மாநிலம் தலைநகரங்களில் வரும்  பிப்ரவரி 25ம் தேதி,மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், அரசு ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த தமிழ்நாடு அரசு, பேச்சு வார்த்தையில் பங்கேற்க 3 அமைச்சர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது. அதன்படி, இன்று அமைச்சர்களுடன் ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினார். அப்போது, தங்களது கோரிக்கைககள் குறித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்க பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள்,  நாளை (25ந்தேதி) அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது.

அமைச்சர்களுடன் நடந்த பேச்சுச்சாவர்த்தையின்போது,  காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியதுடன்,  ஊதிய முரண்களை களைய வேண்டும்; சிறப்பு காலமுறை, மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். அமைச்சர்கள் அதை முதல்வரிடம் கேட்டு சொல்வதாக கூறியுள்ளனர்.  ஆனால், நாங்கள் பட்ஜெட் தொடங்குவதற்கு முன்பதாக, அதாவது மார்ச் 14ந்தேதிக்கு முன்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றவர்,   அமைச்சர்களின் வேண்டுகோளை எற்று நாளை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசின் குழுவை ஏற்க ஜாக்டோ ஜியோ மறுப்பு! போராட்டம் தொடரும் என அறிவிப்பு…