பாட்னா

பீகார் மாநிலத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என லாலு பிர்சாத் யாதவ் கூறி உள்ளார்.

பாஜக டெல்லி  சட்டசபைதேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பரில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலிலும் இந்த முடிவுகள் எதிரொலித்து அங்கும் பாஜக வெற்றி பெறும் என்று பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பேசி வருகின்றனர்.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும் , ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இது குறித்து.,

”டெல்லி தேர்தல் முடிவின் தாக்கம் பீகார் தேர்தலில் எதிரொலிக்காது. இங்கு அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். நாங்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) இங்கே இருக்கும் வரை பாஜக பீகாரில் ஆட்சி அமைக்க முடியாது.

மக்கள் பாஜகவையும் உங்களையும் (ஊடகங்களை) புரிந்து கொண்டுள்ளனர். அப்படியானால், பீகாரில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்றால் தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைப்பார்”

என்று கூறியுள்ளார்.