புனே
மகாரஷ்டிர மாநிலம் புனே நகரில் மேலும் 5 பேருக்கு ஜி பி எச் தொற்று உறுதியாகி உள்ளது.

தற்போது மகராஷ்டிர மாநிலத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக இந்த தொற்று புனே பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.
இதுவரை 7 பேர் இந்த ஜி பி எச் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் இந்த ஜிபிஎஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தொற்று நரம்பு மண்டலத்தை பாதிக்க தொடங்கி, தசை பலவீனம் மற்றும் முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Patrikai.com official YouTube Channel