மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தி அறிக்கை வெளியிட்டதாகக்கூறி, மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு ‘ திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா  வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலையானது குமரன் மலை என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆனால், இடையில் அங்குள்ள மலையின் ஒரு பகுதியில், இஸ்லாமியர் ஒருவர் அடக்கப்பட்ட செய்யப்பட்ட சிங்கந்தர் என்பவரின் தர்கா நினைவாக, சில இஸ்லாமிய அமைப்புகள், அதை சிங்கந்தர் மலை என கூறி சலசலப்பை உருவாக்கி உள்ளன. இதை ராமநாதபுரம் எம்எல்ஏ நவாஸ்கனி ஊதி பெரிதாக்கினார். இதனால், அந்த பகுதியில் இந்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவானது. இதனால், சகோதரனாக வாழ்ந்து வரும் இரு மத மக்களிடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவானது இதில் திமுக அரசும், காவல்துறையும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், மாவட்ட லெக்கடர் சங்கீதாவின் நடவடிக்கையும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தது.

திருப்பரங்குன்றம் மலை பிரச்னையில் மதுரை கலெக்டர் பிப்.5ல் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில், ஒருதலைப்பட்சமாக, அதிமுக மீது சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது அறிக்கையில், இதுதொடர்பாக   ஜன., 30ல் நடந்த அமைதி கூட்டத்தில் அ.தி.மு.க., பிரதிநிதி கலந்து கொண்டதாகவும், அந்தப் பிரதிநிதி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களில் கையெழுத்திட மறுத்து, வெளியே சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். கலெக்டர் அந்த அறிக்கையில் அ.தி.மு.க.,வை குறிப்பிட்டே கூறியுள்ளார். அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சியர் அரசியல் பேசியதும் விமர்சனங்களானது.

இந்த நிலையில்,  மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு ‘ திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா  வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து கூறிய ராஜன் செல்லப்பா,

அ.தி.மு.க., ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம். பொது அமைதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., என்றென்றும் உடன் நிற்கும் என்பது நாடறிந்த ஒன்று. இது போன்ற சூழ்நிலைகளில் சரியான முடிவு எடுத்து, அமைதிக்கு களங்கம் ஏற்படாத வகையில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.

கலெக்டர் குறிப்பிட்டுள்ள அமைதி கூட்ட பேச்சுவார்த்தைக்கு, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வும் மாவட்டச் செயலரும், மாநில அமைப்புச் செயலராகவும் உள்ள எனக்கு அழைப்பு இல்லை. எங்களது நிர்வாகிகளுக்கும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார் ஆகியோருக்கும் கலெக்டர் சார்பில் அழைப்பு இல்லை. அழைப்பு இல்லாத கூட்டத்தில், நாங்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்?

ஆனால், அந்த அமைதி கூட்டத்தில் எங்கள் கட்சி பிரதிநிதி கலந்து கொண்டதாகவும், அதில் எங்கள் பிரதிநிதி கையெழுத்திட மறுத்ததாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.,வை களங்கப்படுத்தும் வகையில், அரசின் அங்கமாக இருக்கும் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார். அவர் தன் தவறை உணர்ந்து, தன் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என நானும், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., ஆகியோர் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

ஆனால், கலெக்டர் எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. இதுவரை வருத்தமும் தெரிவிக்கவில்லை. மாற்றுச் செய்தியும் வெளியிடவில்லை. அதனால், கலெக்டர் மீது சட்டப்படி வழக்கு தொடுக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் அனுமதி பெற்று, என் சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, அ.தி.மு.க., வழக்கறிஞர் குழு பிப்., 7ல் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கலெக்டர் தவறாக தகவல் தெரிவித்ததற்கு, உடனடியாக அ.தி.மு.க.,விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் என்ன கருத்து கூறுகிறதோ, மரபுகளை சொல்லி இருக்கிறதோ, அதை ஆராய்ந்து முடிவு எடுப்போம். எங்களால் பொது அமைதிக்கான ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். அரசு, மாவட்ட நிர்வாகத்துக்கு தான் நிர்வாக ரீதியாக சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.

திருப்பரங்குன்றம் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும். அவரவர் மதத்தை அவரவர் வணங்க வேண்டும். மற்றவர் மதத்தில் அடுத்தவர் குறுக்கிடக் கூடாது. திருப்பரங்குன்றத்தில் நல்ல சூழ்நிலை உருவாக அ.தி.மு.க., என்றைக்கும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம் சர்ச்சை: நாளை இந்துக்கள்  நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு – கெடுபிடி! தடையை மீறுவோம் என அறிவிப்பு

பிரியாணி சாப்பிடவில்லை: திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வுதான் செய்தோம்! நவாஸ் கனி எம்.பி.