டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடிகளில் குடியரசு தலைவர் முர்மு,  மாநில கவர்னர், மாநில முதல்வர்  மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள் தங்களது ஜனநாயக கடமைகளை ஆற்றினர்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அங்கு மொத்தம் உள்ள   தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 5ந்தேதியான இன்று வாக்குப்பதிவு நடெபற்று வருகிறது.

இந்த தேர்தலில் மொத்த 70 தொகுதிகளிலும் ம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவ தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

குடியரசு தலைவர் முர்மு,  ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர்,   ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது மை பூசப்பட்ட விரலைக் காட்டினார்.
அதுபோல,  டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தினார். அவர்கள் வாக்களித்த பிறகு மை பூசப்பட்ட விரல்களைக் காட்டினர்.
டெல்லி முதல்வரும் கல்காஜி சட்டமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளருமான அதிஷி, தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   “உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இந்த போரில், டெல்லி மக்கள் உண்மையுடன் நின்று, உழைத்து, போக்கிரித்தனத்தை தோற்கடிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறுகிறார்.
ஜங்புரா தொகுதியின் ஆம் ஆத்மி தலைவரும் எம்எல்ஏ வேட்பாளருமான மணீஷ் சிசோடியா, “பாஜகவுக்கு வேறு வேலை இல்லை. அவர்கள் வேறு என்ன செய்வார்கள்?” என்று கூறினார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிர்மான் பவன் வாக்குச்சாவடிக்குயில் தனது வாக்கினை பதிவு செய்தார். பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்த ராகுல் காந்தி தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.

கடந்த முறை குடும்பத்துடன் சென்று வாக்களித்த ராகுல் காந்தி இம்முறை தனியாக சென்று வாக்களித்தார்.

மேலும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பல தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.