முசாபர்பூர்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது ஜனாதிபதியை விமர்சித்ததாக பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 23 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தையொட்டி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்ச்திஇது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது சோனியா காந்தி,ஜனாதிபதி, உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டதால் அவரால் பேச முடியவில்லை. என்று கூறியது பா.ஜனதாவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் பலரும் சோனியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநிலம் முசாபர்பூர் கோர்ட்டில் சோனியா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சோனியா காந்தி நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி சுதிர் ஓஜா என்கிற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதி இந்த வழக்கு முசாபர்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.