போபால்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கங்கையில் நீராடுவதால் வறுமையை ஒழிக்க முடியுமா என வினா எழுப்பி உள்ளார்.

நேற்று மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மல்லிகார்ஜுன கார்கே, தனது உரையில்,

“பிரதமர் மோடியின் பொய்யான வாக்குறுதிகளின் வலையில் சிக்காதீர்கள். கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? அது உங்கள் வயிற்றை நிரப்புமா? நான் யாருடைய நம்பிக்கையை எதிர்த்து கேள்வி கேட்க விரும்பவில்லை. யாராவது மோசமாக உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால், ஒரு குழந்தை பசியால் இறக்கும் சூழலில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் நேரத்தில், தொழிலாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறாமல் இருக்கும் நேரத்தில், இங்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து கங்கையில் நீராடப் போட்டி போடுகிறார்கள்.

கேமராவில் நன்றாகத் தெரியும் வரை அவர்கள் (பாஜகவினர்) தொடர்ந்து நீராடிக்கொண்டே இருக்கிறார்கள். அத்தகையவர்களால் நாட்டிற்கு நன்மை செய்ய முடியாது. எங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. மக்கள் ஒவ்வொரு நாளும் வீட்டில் ‘பூஜை’ செய்கிறார்கள். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள். இதுவே எங்களுக்கு பிரச்சினை உள்ளது.”

எனக் கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]