புதுச்சேரி
வரும் 31 ஆம் தேதிக்குள் புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் துணை பதிவாளர் அனுப்பியுள்ள உத்தரவில்,
“மத்திய குடிமை பணிகள் சேவை (நடத்தை) விதிகள் 1964-ன் கீழ் குரூப்-ஏ, பி, சி, டி என அனைத்து அரசு ஊழியர்களும் வருடாந்திர அசையா சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய குடிமை பணிகள் சேவை விதியின் கீழ் வருகிற 31-ம் தேதிக்குள் வருடாந்திர அசையா சொத்து கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் அகில இந்திய சேவை (நடத்தை) விதிகள் 1968-ன் படி அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ம் தேதிக்குள் சொத்து கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் 2024-ம் ஆண்டிற்கான வருடாந்திர அசையா சொத்து கணக்கை வருகிற 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்”
எனக் கூறப்பட்டுள்ளது.