காஞ்சிபுரம்
இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை என பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறி உள்ளார்.
கடந்த மாதம்ம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்., அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அஸ்வின், அங்கிருந்த மாணவர்களிடம் உங்களில் தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் உற்சாகமாக சத்தம் எழுப்பி, தங்கள் தாய்மொழி தமிழ் என்பதை தெரிவித்தனர். பிறகு இந்தி மொழி மாணவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என்று அஸ்வின் கேட்டபோது அங்கு எந்த சத்தமும் கேட்கவில்லை.
அப்போது அஸ்வின், ”
”சத்தம் வரவில்லையே, இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை. அது வெறும் அதிகாரப்பூர்வ மொழி என்று சொல்லலாம் என்று நினைத்தேன் என்னிடம் யாராவது உன்னால் முடியாது என்று சொன்னால்தான் நான் எழுந்துகொள்வேன்.
உன்னால் முடியும் என்று சொன்னால் நான் தூங்கிவிடுவேன். நான் இந்திய அணியின் கேப்டனாக ஆவேன் என்று நிறைய பேர் என்னிடம் சொன்னதால்தான் நான் கேப்டனாக ஆகாமல் இருந்துவிட்டேன்.
நீங்கள் ஒரு மாணவராக இருக்கும் வரை உங்கள் கல்வி பயணம் நிற்காது. ஆனால் நீங்கள் மாணவராக இல்லாவிட்டால் உங்கள் கல்வி பயணம் நின்றுவிடும். எனவே, உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் ஒரு மாணவராகவே இருக்க வேண்டும்”
என்று தெரிவித்தார்.