சென்னை

யூடியூபர் சவுக்கு சங்கர் புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கரை பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி தேனியில் காவல்துறையினர் கைது செய்தபோது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அவர் iஇந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் கடந்த சில விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கு நீதிபதி செங்கமல செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கரஆஜராகவில்லை என்பதால் சவுக்கு சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை அடுத்து சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது மேலும்  ஒரு புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தூய்மை பணியாளர் தொடர்பாக தமிழக அரசின் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பேசி வெளியிட்டதற்காக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.