டெல்லி: அம்பேத்கர் விவகாரத்தை கையில் எடுத்த, நாடாளுமன்ற வளாகத்தில்  எதிர்க்கட்சி  எம்.பிக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பிக்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கைகலப்பில், பாஜக எம்.பி.யின் மண்டை உடைந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மண்டை உடைந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி,  ராகுல் காந்தி ‘தள்ளி விட்டதால்’ என் மண்டை உடைந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். தான், உள்ளே செல்ல முயன்றபோது, ​​பா.ஜ., எம்.பி.,க்கள் என்னை தள்ளினர்…” என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.

பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது.  அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நீலநிற உடை அணிந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுக்கு எதிராக, பாஜக ஆதரவு எம்.பி.க்களும் போராட்டம் நடத்தினர். இந்த பேரணி ஒரு சமயத்தில் ஒரே இடத்தில் சந்தித்தது.  இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், எ.பி.க்கள் ஒருவர்மீது ஒருவர் விழுந்தனர்.

இந்த மோதலில் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”என் மீது விழுந்த எம்.பி.யை, ராகுல் காந்தி தள்ளிவிட்டார். இதனால், நான்  கீழே விழுந்தேன்.. அதனால் தலையில் அடிபட்டது. நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, ​​ராகுல் காந்தி வந்து, என் மீது விழுந்த எம்.பி.,யை, தள்ளினார் என கூறினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அம்பேத்கர் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்… பேரணி – வீடியோக்கள்