சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும்,   தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேலும் வலுவடைந்த தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் . எதிரொலியாக 5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. மேலும் சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.    நாளை (அக்டோபர் 16ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை (204.மி.மீ) பெய்யக்கூடும் என எச்சரித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் நள்ளிரவு முதலே மழை கொட்டி வருகிறது.   அதுபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர, உள்பட பல மாவட்டங்களில் மழை பெடய்து வருகிறது. இதனால்,  சென்னைக்கு குடிநிர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 250 கன அடியாக இருந்த நிலையில் 260 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஏரியின் நீர்மட்டம் 13.23 அடியாக உள்ளது.

புழல் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 196 கன அடியாக இருந்த நிலையில், இன்று(அக்.,15) 277 கன அடியாக அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரிக்கான நீர்வரத்து 650 கன அடியாக அதிகரித்துள்ளது.

சோழவரம் ஏரிக்கு நேற்று, நீர்வரத்து இல்லாத நிலையில் இன்று 160 கன அடியாக அதிகரித்துள்ளது.

வீராணம் ஏரிக்கான நீர்வரத்து 1,423 கன அடியாக உயர்ந்துள்ளது.