டெல்லி

த்திய அரசு வாகனங்களுக்கு செயற்கைக் கோள் மூலம் சுங்ககட்டணம் வசூல் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

ரொக்கம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.  சுங்கச்சாவடிகளில் நேர விரயம் ஏற்பட்டு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவானthaal அதை போக்க ‘பாஸ்டேக்’ முறை அமலுக்கு வந்தது. ஆயினும் விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் வெளியூர் செல்பவர்களால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி வருகின்றன.

‘பாஸ்டேக்’ முறையுடன், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘குளோபல் நேவிகேஷன் சாட்டலைட் சிஸ்டம்’ (ஜி.என்.எஸ்.எஸ்.) என்ற பயண தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை, குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும் என்று கடந்த ஜூலை மாதம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை பிரிவிலும், அரியானா மாநிலத்தில் பானிபட்-ஹிசார் பிரிவிலும் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தற்போது இந்த புதிய முறை, நாடு முழுவதும் சில நெடுஞ்சாலைகளிலும், அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி 2008-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில், செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓ.பி.யு. கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும்.

இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணிக்கும்போது, நாள் ஒன்றுக்கு, முதல் 20 கி.மீ.க்கு கட்டணம் கிடையாது. அதன்பிறகு பயணிக்கும் தூரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, ‘பாஸ்டேக்’ போலவே வங்கிக்கணக்கில் இருந்து சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.