டெல்லி
மத்திய அரசு 70 வயதை தாண்டிய அனைவருக்கும் ரூ 5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்க உள்ளது
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்,
” • 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) இன் கீழ் ஒரு தனித்துவமான அட்டையைப் பெறுவார்கள்.
- ஏற்கனவே AB PM-JAY இன் கீழ் உள்ளவர்கள், குறிப்பாக அவர்களது குடும்பங்களில் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கூடுதலாக பெறுவார்கள்.
- பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து ஏற்கனவே பயனடையும் மூத்த குடிமக்கள் தங்களின் தற்போதைய திட்டத்தைத் தொடரலாம் அல்லது AB PM-JAY இன் கீழ் புதிய காப்பீட்டை தேர்ந்தெடுக்கலாம்.
- ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்பது உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி சுகாதார உறுதித் திட்டமாகும்.
- இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு வழங்குகிறது.
- குடும்ப உறுப்பினர்களின் வயதைப் பொருட்படுத்தாமல், 12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி மக்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியது.
- இத்திட்டத்தின் கீழ் 7.37 கோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பயனாளிகளில் 49 சதவீதம் பேர் பெண்கள் என அரசு அறிக்கை கூறியுள்ளது.
- இதுவரை, இந்த சுகாதாரத் திட்டம் மூலம் பொதுமக்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பயனடைந்துள்ளனர்’.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.